ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்; 'அரசு வெளியிட்டுள்ள மருத்துவ காப்பீடு திட்டம் ஏற்கும் வகையில் இல்லை' எனக்கூறி, தமிழ்-நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்-தினர், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் இளங்-கோவன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் குப்புசாமி, பொருளாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், தமிழக அரசு வெளியிட்டுள்ள மருத்துவ காப்பீடு திட்டத்தை ஓய்வூதியர்கள் ஏற்க-மாட்டோம். ஓய்வூதியர் சங்கங்களை புறக்கணிக்-கக்கூடாது. கட்டாய பிரீமியமாக, 644 ரூபாய் பிடித்தம் செய்யக்கூடாது. வெளிப்படைத்தன்-மையற்ற பேக்கேஜ் திட்டம் ஏமாற்று வேலை.அவசரத்திற்கு பட்டியலில்லாத மருத்துவம-னையில் சிகிச்சை மேற்கொண்டால், 60 சதவீதம் மட்டுமே என்பது மனிதநேயமற்ற செயலாகும்.
கடந்த கால சங்கங்களின் முறையீடுகளை, நீதி-மன்ற ஆலோசனைகளை புறந்தள்ளி அரசாணை என்ற பெயரில் ஓய்வூதியர்களின் உயிரோடு விளையாடும் செயலாகும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மேலும்
-
கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
-
காமன்வெல்த் விளையாட்டு போட்டி; இதுவரை இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் வென்று சாதனை
-
பழநி கோவில் நில மோசடி விவகாரம்: 4 பேரை கைது செய்தது சிபிசிஐடி
-
உக்ரைன் துறைமுகத்தில் இந்திய மாலுமிகள் 13 பேர் சிக்கித் தவிப்பு; உடனடியாக மீட்கக் கோரிக்கை
-
அமெரிக்கப் படைகள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதல்; மீண்டும் மேற்காசியாவில் பதற்றம்
-
'அப்பாச்சி ஆர்.ஆர்., 200 மினி ஜிபி' சிறுவர்களுக்கான டி.வி.எஸ்., ரேஸ் பைக்