உக்ரைன் துறைமுகத்தில் இந்திய மாலுமிகள் 13 பேர் சிக்கித் தவிப்பு; உடனடியாக மீட்கக் கோரிக்கை
புதுடில்லி: போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் 13 பேரை பத்திரமாக மீட்கக்கோரிக்கை வலுத்து வருகிறது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. இருநாடுகளும் பரஸ்பர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்தப் போர் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தத் தாக்குதல் காரணமாக, உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் 'எம்.வி அமீர் 1' என்ற சரக்குக் கப்பல், பாதுகாப்பு காரணங்களுக்காக, அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 15 மாலுமிகள் உள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய அரசுக்கு இந்திய மாலுமிகள் மற்றும் கடல்சார் ஊழியர்களின் நலன்களுக்கான அமைப்பான எப்எஸ்யுஐ (FSUI) வலியுறுத்தியுள்ளது. எந்த நேரமும் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம் என்பதால், விரைந்து நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
சமூக பொறுப்புணர்வை வளர்த்துக்கொள்ளுங்க! மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
-
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி
-
ஆடி கருடசேவை உத்சவம்
-
பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி; முதல்வர் விஜய் பரிசீலனை
-
5 ஆண்டுகளில் அபார வளர்ச்சி; ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் இந்தியர்கள் 576 பேர்!
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா கோலாகல கொண்டாட்டம்