பழநி கோவில் நில மோசடி விவகாரம்: 4 பேரை கைது செய்தது சிபிசிஐடி
நமது நிருபர்
பழநி கோவில் நில மோசடி வழக்கில், வெள்ளத்துரை, அன்வர்தீன், முருகதாஸ், சேதுபதி ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில், தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்த புகாரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளையை சேர்ந்த முருகதாஸ், திருப்பூர் மாவட்டம், உடுமலை பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழநி சேதுபதி, கோவில் நிர்வாக அதிகாரிகள், வருவாய் துறையினர், பதிவுத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
நீதிமன்ற வழக்கு, பத்திரப்பதிவு, விற்பனையாளர், பயனாளி, சாட்சிகள், புரோக்கர், எழுத்தர், பராமரிப்பு, நிர்வாகம் என இதுவரை, 82 பேரிடம் விசாரணை நடத்தி சாட்சியங்களை சேகரித்துள்ளனர். இதுவரை 82 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளத்துரை, அன்வர்தீன், முருகதாஸ், சேதுபதி ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இந்த மோசடி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரத்யேக வீடியோ!
ரூ.100 கோடி பழநி நில மோசடியில் 4 பேரை தூக்கியது சிபிசிஐடி; பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
பழனியில் 1.4 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 100 கோடி ரூபாய். இது ஒரு புருடா என்பது என் ஒன்பது மாத பேரனுக்குக் கூடத் தெரியும். இருந்தும், எதிர்க்கட்சிகளும் அடிமை ஊடகங்களும் தினமும் இந்தப் பொய்யைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. சென்னை OMR-ல் அதே 1.4 ஏக்கர் நிலம், கூடுதல் மதிப்பாக 36 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது. .
அப்போ 10 கோடினா, ஊழல் பண்ணிக்கலாமா?
பாவம். இவர்கள். யார் பெத்த பிள்ளையோ
கஞ்சிக்கு செத்த நாலு பேரை கைது என்று சொல்லி நாடகம் ஆடுகிறார்கள். எந்த அமைச்சரோட பினாமி?
CID விருமாண்டி இங்கே தினமும் வந்து வாந்தி எடுக்காம உனக்கு உண்மை தெரியும் என்றால் அமைச்சர் வாங்கினார் என்று தரவு கொடு. இன்னும் கொஞ்ச நாளில் 200 ரூபாய் கிடைப்பது நின்று விடும்
அந்த நாலாவது நபர் தண்டாயுதபாணி சாமியா? மிகவும் கடினமான சூழ்நிலையில்கூட ஊடங்களும் அரசும் சேர்ந்து வெளிப்பட தன்மை என்ற தர்மத்தை நிலைநாட்டிவிட்டார்கள். மாற்றம் என்ற தோற்றம் இதுதான்
அரசு எங்க தர்மத்தை நிலைநாட்டி இருக்கு.சம்பவத்தை வெளிகொண்டுவந்தது ஊடகம்தான். பக்க பிளான் பண்ணி , ரெஜிஸ்டெரரை மாற்றி, ஊழலை அரங்கேறியது அரசுத்துறைதான். வேறுவழி இல்லாமல் தவறுன்னு ஒத்துக்கொண்டது. தினமும் செய்திகளை படிங்க ராசா... .
திருட்டு தொழிலும் சம்பிராணியும் இணைபிரியா நண்பர்கள். இன்னொரு ஆளின் காசை /சொத்தை பிடுங்கி தின்பதில் சாம்பிராணி புத்தி அலாதி. உடம்பிலேயே ஊறியது திருட்டு புத்தி. திருந்தாத ஜென்மங்கள் சாம்பிராணி ஆட்கள் .
அப்படி இல்லைங்க நீங்க சொல்வது தவறு பணம் என்றால் எல்லாம் சேர்ந்து தான் செய்திருக்கிறார்கள்மேலும்
-
பார்லி.யை தவறாக பயன்படுத்தி பொய் பேசும் ராகுல்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கண்டிப்பு
-
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் தேடப்படும் குற்றவாளியாக ரஷ்யா அறிவிப்பு
-
தமிழகத்தில் அரிசி விலை உயர்வா? அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் சொல்வது இதுதான்!
-
திருக்கோவிலுாரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
-
பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புறகாவல் நிலையம் திறக்கப்படுமா
-
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி