கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
கரூர்: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகே உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது, தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

செந்தில்பாலாஜி வீட்டில் காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் மொத்தம் 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. செந்தில்பாலாஜியின் பெற்றோரிடமும் விசாரணை
நடந்தது. கரூர் கோதை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கார்த்திக் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
41 இடங்களில் சோதனை
டாஸ்மாக் ஊழல் வழக்கு தொடர்பாக சென்னை, கரூர் உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, எம்.பி. டி.ஆர். பாலூவிற்கு, சொந்தமான, மதுபான தொழிற்சாலையிலும், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லாகோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
சிவகங்கையில் டாஸ்மாக் அலுவலகத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
@block_B@
3 மணிநேர விசாரணை
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக சென்னையில் செந்தில் பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய 3 மணிநேர விசாரணை நிறைவடைந்தது.
block_B
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி ரெய்டு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இதுவரையில் பல நூறு முறை இவரை மாட்டிவிட முயன்றும் இன்றுவரை எவராலும் முடியவில்லை. ப சியைவிட கில்லாடியாக இருக்கிறார். இந்தப் பொருளாதாரக் குற்ற விசாரணை அமைப்புகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளான மத்திய பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு CEIB மற்றும் அமலாக்க இயக்குநரகம் ED ஆகியவை இந்தியாவின் மத்திய நிதியமைச்சகத்தின் Ministry of Finance கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. இதன் பொறுப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் Nirmala Sitharaman. கல்வித்துறையின் கையாலாகாத்தனத்திற்கு அதன் அமைச்சர் பதவி விலகி வேண்டுமென்பது போல நிதியமைச்சர் பதவி விலக வேண்டுமென ஏதேனுமொரு பெருச்சாளி ஜனதா கட்சி போராடுமா? இப்படியே ஒவ்வொருவரையும் பதவி விலக வைத்தால் தானே மோடி அரசு கவிழாதா
செந்தில் பாலாஜி கேஸ் இப்போதுதான் சூடு பிடித்திருக்கிறது. மிக வேகமாக விசாரணைகள், சோதனைகள் நடக்கின்றது. எப்படியும் இன்னும் 50 வருடங்களுக்குள் கேஸ் மொத்தமும் முடிந்து தீர்ப்பும் வந்துவிடும்.
இந்தியாவிலேயே மிகவேகமாக முடிக்கபட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்ட ஒரு கேஸ் இதுவாகத்தான் இருக்கும் என்ற சாதனை படைக்கபோகிறது.. வாழ்க இந்திய ஜனநாயகம்.. வாழ்க இந்திய நீதிமன்றங்கள்.
கரூரில் 31 பேர் அரசுநியமனம் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட தோல்வியை திசைதிருப்ப இந்த நாடகம் .
செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது அனைத்து வணிக அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தைத் திறப்பது நல்லது.
இருக்கவே இருக்கு நீதிமன்றங்கள். எல்லா தீயவர்களுக்கும் அங்கே பாதுகாப்பு கிடைக்கும் .
இந்த அயோக்கியனுக்கு இவ்வளவு கால அவகாசம் ஏன் கொடுக்கவேண்டும் கைது செய்ய. ஒரு சாமானியனுக்கு இவ்வளவு கால அவகாசம் கொடுப்பீர்களா போலீஸ்காரரே, நீதிமான்களே… ?
செந்தில் பாலாஜி கு பேரன் ,பிறந்த பின் சோதனை செய்திருகக்கலாம்
Will be very surprising if anything is found in these places.
ஏண்டா.... இன்னமுமா ஆதாரங்களை வூட்டுல வச்சுட்டு இருப்பான்?மேலும்
-
மினி டெம்போ வாகனம் மோதி கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
-
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு
-
அக்கராயபாளையத்தில் திருத்தேர் திருவிழா
-
பெண்கள் மீதான அவதுாறு குறித்து நடவடிக்கை த.வெ.க., ஆட்சி மீது சி.வி.சண்முகம் காட்டம்
-
பழந்தமிழ் எழுத்துகள் ஒரு நாள் பயிலரங்கம்
-
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் கல்லீரல் ஆரோக்கிய விழிப்புணர்வு