'குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்' மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

நாமக்கல்; 'கடும் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, நாமக்கல் மாநகராட்சியில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என, மாநக-ராட்சி கமிஷனர் செல்வபாலாஜி தெரிவித்-துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட, 12 கிராம பஞ்., கள் மற்றும் ஏற்கனவே உள்ள, 39 வார்டு பகுதிகளுக்கு, மோகனுார் குடிநீர் திட்டம் மற்றும் ஜேடர்பாளையம் குடிநீர் திட்டம் மூலம், காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு தினமும், 32.80 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.


தற்போது, கோடைகாலம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக கடும் வறட்சியால், காவிரி ஆற்றில் குடிநீர் வரத்து குறைய தொடங்கி உள்-ளது. அதனால், நாமக்கல் மாநகராட்சியால் வழங்கப்பட்டு வரும் குடிநீரை, இணைப்பு பெற்-றுள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு சிக்கனமாக பயன்
படுத்த வேண்டும்.
மேலும், குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது மற்றும் குடிநீர் கட்டுப்-பாட்டு கருவியை கழற்றி விட்டு குடிநீர் பிடிப்பது, குடிநீர் பிடித்த பின், குடிநீரை கேட் வால்வ் வைத்து அடைக்காமல், தோட்டத்திற்கு விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம்.
எனவே, குடிநீர் இணைப்புதாரர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மின்மோட்டார் பறி-முதல், குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் அப-ராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement