'மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கிளை கேள்வி
மதுரை: அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, மாதவிடாய் விடுப்பு வழங்க தாக்கலான வழக்கில், இவ்விவகாரத்தில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை, நர்மதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
அரசு, பொதுத்துறை, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியால் பாதிக்கப்படுகின்றனர். அதை மறைத்துக்கொண்டு, சக ஆண் ஊழியர்களுக்கு இணையாக பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில் வேலைக்கு வருகின்றனர்.
கர்நாடகா, கேரளா, பீஹார், ஒடிஷாவில் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில், பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கொள்கை எதுவும் இல்லை. இது பெண் ஊழியர்களை பாகுபடுத்தும் வகையில் உள்ளது.
மாதவிடாய் விடுப்பு என்பது சலுகையோ அல்லது சிறப்புரிமையோ அல்ல. அது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொது சுகாதார மற்றும் தொழிலாளர் நல நடவடிக்கை. இதை மாநில அரசு ஏற்றுக்கொள்ள தவறுவது, பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய கடமையை புறக்கணிப் பதாகும்.
மாதவிடாய் விடுப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறு பற்றி ஆய்வு செய்ய, மாநில அளவில் உயர்நிலை குழுவை அமைக்க இடைக்கால உத்தரவிட வேண்டும்.
அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, முழு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கையை உருவாக்க வலியுறுத்தி, தமிழக தலைமை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப் பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மோதர்ஷினி ஆஜரானார். அரசு தரப்பு, 'இது தொடர்பான விதிகளை உருவாக்க, அதை தொழிலாளர் நீதிமன்ற விதிகளில் சேர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை' என, தெரிவித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் கோரும் நிவாரணம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் அரசு அமைத்த குழு உறுப்பினர்களின் விபரங்களை தமிழக அரசு தரப்பில் ஆக., 24ல் தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.
தேவை அற்ற நடைமுறை. ஒவ்வொரு பெண்ணிற்கும் வெவ்வேறு நாட்ட்கள். இயல்பான விஷயம் பகிற படுத்த வேண்டாம்.
தனியார் நிறுவனங்களில் பெண்களின் வேலை வாய்ப்பு குறைந்து விடும்.
சனி ஞாயிறு என்று எட்டு நாள் ஒன்பது நாள் வாரவிடுமுறயில் போய்விடும். அந்த நேரத்தில் மாதவிடாய் இருந்தால் கூட மறைத்து இன்னும் மூன்று நாட்கள் கேட்பார்கள். ஆக மொத்தம் மாதம் 15 /16 நாட்கள் தான் வேலை. முழு சம்பளம். ஜாக்பாட் தான் போங்க..
விடாய் நின்று போனவர்களுக்கும் லீவு கேட்க வாய்ப்புள்ளது. எப்படித் தடுப்பது?
50 வயது என்று வரம்பு வைக்க வேண்டும்.
இதுகுறித்து விரைவில் முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்மேலும்
-
டோட்டலா மக்கராகி கிடக்கும் உடற்பயிற்சி கருவிகள் பரிதாப நிலையில் கடற்கரை சாலை திறந்தவெளி ஜிம்
-
சிட்டி ஸ்போர்ட்ஸ் / மாநில கபடி போட்டி
-
வடமதுரை பெருமாள் கோயிலில் தேரோட்டம்
-
சிட்டி பேனர் // இணைப்பு பாலம் அரசு மருத்துவமனை இரு வளாகங்களுக்கு இடையே குழந்தைகள் நல வார்டு 3 மாதங்களில் முடியும்
-
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 30க்குரியது
-
மின் இணைப்பு வழங்க லஞ்சம் மின்துறை ஊழியர் கைது