டாஸ்மாக் மதுக்கடைகளில் 50 சதவீதம் தனியார்மயம்?
சென்னை: தமிழகத்தில் உள்ள, 'டாஸ்மாக்' மதுக் கடைகளில், 50 சதவீத கடைகள் தனியாருக்கு கைமாறுகின்றன. குறிப்பாக, முக்கிய நகரங்களில் உள்ள மதுக் கடைகளை ஒப்படைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது, அரசு நிறுவனம் மட்டுமே மது விற்பனையில் ஈடுபட்டு வரும் நிலையில், வணிக போட்டியை உருவாக்கி, அரசுக்கு கூடுதல் வருமானம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2003 வரை மதுபான சில்லரை விற்பனையில், தனியார் மட்டுமே ஈடுபட்டிருந்தது. போலி மது விற்பனை உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததை அடுத்து, 2003ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, மதுபான சில்லரை விற்பனையை அரசு வசமாக்கினார்.
விரும்புகிறது
அப்போது முதல், தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்று வருகிறது. தற்போதுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு, மதுபானங்கள் கொள்முதல் மற்றும் மதுபான சில்லரை விற்பனையில் நடை பெறும் முறைகேடுகளை தடுக்க விரும்புகிறது.
அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், 717 மதுக் கடைகள் மூடப்பட்டன. பின், மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படும் நிறுவனங்களிடம் இருந்து, தனியாருக்கு சென்ற பணத்தை, அரசு கஜானாவுக்கு திருப்பும் வகையில், மது பெட்டிக்கு 90 ரூபாய், பீர் பெட்டிக்கு 40 ரூபாய், ஒயின் பெட்டிக்கு 20 ரூபாய் என, கூடுதல் கட்டணமாக அரசுக்கு செலுத்த, மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதன் வாயிலாக அரசுக்கு ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் கூடுதல் வரு வாய் கிடைக்க உள்ளது.
டாஸ்மாக் மதுக் கடைகளை ஒட்டி குளிர்பானங்கள், தின்பண்டங்கள் விற்க, 'பார்' எனும் மதுக்கூடங்கள் உள்ளன. அவற்றுக்கான ஒப்பந்தம் முடிந்துள்ள நிலையில், ஏற்கனவே நடத்தி வரும் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமின்றி, புதியவர்களும் மதுக்கூடம் எடுப்பதற்கான டெண்டரில் பங்கேற்கும் வகையில், விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
மதுக்கடையுடன் இணைந்தே மதுக்கூடம் நடத்தப்பட்ட நிலையில், இனி மதுக் கடையை ஒட்டி அல்லது மதுக் கடையில் இருந்து, 100 மீட்டருக்குள் அமைந்துள்ள இடத்தில் மதுக் கூடம் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.
தரமான சேவை
அடுத்த கட்டமாக, மதுபான சில்லரை விற்பனையில் போட்டியை உருவாக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, மொத்தம் உள்ள மதுக் கடைகளில், 50 சதவீதத்தை டாஸ்மாக் வசமும், மீதமுள்ள 50 சதவீத கடைகளை தனியார் வசமும் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எந்த ஒரு வணிகமாக இருந்தாலும், ஒரே நிறு வனம் மட்டும் இல்லாமல், போட்டி இருந்தால் தான், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை கிடைக்கும். தமிழகத்தில் சில்லரை கடைகள் வாயிலாக, மது மட்டுமே அரசு விற்கிறது.
அந்த கடைகளின் பணியாளர்கள், பாட்டிலுக்கு 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றனர். இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்தாலும், முறைகேடு தொடர்கிறது. இதனால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.
மது விற்பனை வாயிலாக, அரசுக்கு கூடுதல் வருவாய் பெறுவதோடு, முறைகேட்டை தடுத்து, தனியாருக்கு செல்லும் பணத்தை அரசுக்கு திருப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன்படி, மது விற்பனையில் டாஸ்மாக் மட்டுமின்றி, தனியாருக்கும் அனுமதி அளிக்க தீவிர ஆலோசனை நடக்கிறது.
சட்டத் திருத்தம்
சென்னை மற்றும் 10 லட்சத்துக்கும் அதிக மக்கள்தொகை உடைய முக்கிய நகரங்களில் உள்ள பெரும்பாலான மதுக் கடைகளை, தனியார் வசம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக மொத்தம் உள்ள 4,048 கடைகளில், பாதி கடைகளை டாஸ்மாக் நிறுவனமும், மீதி கடைகளை தனியாரிடம் தரவும் வாய்ப்பு உள்ளது. இதற்கான சட்டத் திருத்தம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க தலைவர் பழனிபாரதி கூறுகையில், ''மதுபான பாட்டில் விலையை விட, 1 ரூபாய் கூட அதிகம் வாங்கக்கூடாது என, சங்கத்தின் சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மது விற்பனையை தனியாரிடம் ஒப்படைக்க, அரசு முடிவு செய்துள்ளதை, நாங்கள் வரவேற்கிறோம்,'' என்றார்.
@block_B@
பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில் மொத்தமுள்ள 4,048 டாஸ்மாக் கடைகளில், நகரப் பகுதிகளில் உள்ள 2,500 டாஸ்மாக் கடைகளை மட்டும் தனியார்மயமாக்க, தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனியார் மதுக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டால், தமிழகத்தில் மது வெள்ளமாக பாயும். எனவே, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட்டு, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க, சட்டசபை கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வர, த.வெ.க., அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. தனியார் வசம் ஒப்படைக்கும் அரசின் முடிவு, சட்டவிரோத மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் குறைக்காது.block_B
@block_Y@
டாஸ்மாக் நிறுவனத்தின் மது விற்பனையால், தமிழக அரசுக்கு 2025 - 26ல் ஆயத்தீர்வை வாயிலாக 11,836 கோடி ரூபாயும், மதிப்பு கூட்டு வரி வாயிலாக 39,010 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது.block_Y
மதுவின் சுவையை /போதையை தமிழக மக்களுக்கு முதன் முதலில் அறிமுகம் செய்துவிட்டார் கருணாநிதி .அதனால் அதை தடை செய்தாலும் நிரந்தரமாக மக்களை குடியின் அடிமையில் இருந்து மீக்க முடியவில்லை .ஐம்பது வருடங்களுக்கு முன்பு கிராமங்களில் திருவிழா நடைபெறும் இடங்களில் TAS ரத்தினம் பட்டணம் பொடி கம்பெனியினர் இலவசமாக அந்த மூக்குப்பொடி பொட்டலங்களை அதிக எண்ணிக்கையில் கூட்டத்தில் வீசுவார்கள் . அதனை முதன்முதல் உபயோகிப்போர் ,அதன் பின்பு காரம், மணம், குணம், நிறைந்தது எது?” என்று கேட்டால் T.A.S. ரத்தினம் பட்டணம் பொடி ..என்று சொல்லும் அளவிற்கு மக்கள் அதனை பழக்கப்படுத்திக் கொள்வார்கள் .பிறகென்ன பட்டணம் பொடி வாங்குவதற்காக, கடை முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களை நான் சிறுவயதில் கண்டிருக்கிறேன் .அதுதான் மது விஷயத்திலும் நடந்துவிட்டது .மதுவின் சுவையை முதன்முதலில் தமிழகத்தில் காட்டியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் . இதில் மாற்றுக்கருத்து இல்லை
உண்மையிலேயே நல்ல விஷயம் .
இனி தெருவுக்கு 5 பார்கள் வரப்போகிறது. சரக்கடிக்க ரொம்பதூரம் அலைய வேண்டியதில்லை வீட்டின் அருகிலேயே கிடைக்கும் .அதோடு ,பாருடன் இணைந்த குடும்ப உணவகமும் வருகிறது .இனிமேல் ஒரே குதூகலம்தான் .நாங்கள் எதிர்பார்த்த மாற்றம் கிடைத்துவிட்டது .
நன்றி அண்ணா .இது ஒன்றே போதும் , நாங்கள் போட்ட வோட்டு வீண்போகவில்லை.
ஏழைகளுக்கு இலவசம் கொடுக்கிறோம் அவர்களிடம் வசதி இல்லை அவர்கள் கஷ்டப்பட வேண்டாம் என்று
ஆனால் அவர்களுக்கு சாராயம் குடிக்க மட்டும் பணம் வருகிறது
அது எப்படி
அதனால் இனி மதுவினியோகம் ரேஷன் கார்டின் அடிப்படையில் தான் கொடுக்கப்பட வேண்டும்
மது வாங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இலவசங்கள் எதையும் கொடுக்கக்கூடாது
இதுதான் நியாயமானது இதுதான் நேர்மையானது
தயவு செய்து அரசும் நீதித்துறையும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக்கொள்கிறோம்
இப்படிக்கு வரிகட்டி நொந்து போகும் மக்கள்
லாட்டரி கும்பல் டாஸமாக் சாராய கும்பலாக உருவெடுப்பதை சீக்கிரம் பார்க்கலாம். இதை செய்தால் தவெக ஊழலில் தீமுகவை தூக்கி சாப்பிட்டதாக அர்த்தம்.
கமிஷன் ஊழல் அடைமழைக்கு நல்லதொரு வாய்ப்பு
தங்களுடைய கட்சிக்காரர்களை தொழிலதிபராக மாற்ற நடக்கும்நடவடிக்கைபோல தெரிகிறது
பாத்துக்கங்க! லாட்டரி கும்பல் தன் வேலையை காட்ட ஆரம்பிக்குது.கடைகளை தனியாருக்கு குடுத்து பல லட்சம் கோடி லாட்டரி பாக்க போகுது.மக்களை சுரண்டி கொள்ளையடிக்கும் இது போன்ர திட்டங்களை ஒரு நாளும் எங்க தங்கா தள்ளபதி செய்ததில்லை.ஏன் தள்ளபதியை தோற்க்கடித்தோம் என அனுதினமும் துடிக்கிராராகள்.கெரகத்த!
இதுதான் விஜயின் நல்லாட்சி?
நூறு சதவீதம் மது விற்பனையை தனியார் களிடம் கொடுத்துவிடலாம் .அரசின் வேலை மது விற்பதில்லை .போக்குவரத்து .ரேஷன் ,பால் என அரசு செய்யும் அனைத்து வணிக நோக்கம் கொண்ட
பணிகளையும் தனியாரிடம் கொடுத்துவிடலாம் .இதனால் அரசுக்கு வேலை பளு குறையும் மற்ற வளர்ச்சியில் கவனம் செலுத்தலாம் .
60 நாட்களில் ஆங்கிலம் கற்பது எப்படி என்பது போல " மக்களை துன்புறுத்தாமல் கல்லா கட்டுவது எப்படி " என்று டிசைன் டிசைனாக யோசித்து , புதிய பார் tender களுக்கு ஆ தி மு க மற்றும் தி மு க காரர்களிடம் பணம் பெற்றும் மக்களால் வெற்றி பெட்ரா தா வே க சட்டமனற்ற உறுப்பினர்களுக்கு பார் அனுமதி கொடுப்பதற்காகவும் இந்த மாற்றங்கள்