1,000 அரசு பஸ்களில் பார்சல் வசதி: நஷ்டத்தை போக்க புதிய முடிவு

20

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில், முதல் கட்டமாக, 1,000 விரைவு பஸ்களில், 'பார்சல்' அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில், எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், தினமும், 21,515 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 43,865 கோடி ரூபாய் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, வருவாயை பெருக்க, அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக, பார்சல்கள் ஏற்றிச் செல்லும் வசதியுடன் புதிய பஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. அதுபோன்ற பஸ்சை, போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் ஆய்வு செய்தார்.

இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

கட்டண உயர்வு இன்றி, இதர வழிகளில் வருவாயை பெருக்க, புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.

அரசு போக்குவரத்து கழ கங்களில் உள்ள காலி இடங் களை தனியாருக்கு நீண்ட நாட்களுக்கு குத்தகைக்கு விடுவது, சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவது, பஸ் நிலையங்களில் வணிக வளா கம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட உள்ளன.

உடனடியாக செயல்படுத்தும் வகையில், வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்களில், பார்சல் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தொடங்க முடிவு செய்துள்ளோம்.

பயணியர் தங்களது பயணத்தின்போது, கையில் எடுத்து செல்ல முடியாத பெரிய பொருட்கள், லக்கேஜ்களை, 'பார்சல்' என புக்கிங் செய்து, அதற்கான கட்டணம் செலுத்தி எடுத்து செல்லலாம்.

இதற்காக, புதிய பஸ்களின் பின்பகுதியில், பிரத்யேக இடம் ஒதுக்கீடு செய்யப்படும். நியாயமான முறையில் கட்டணம் இருக்கும்.

முதல் கட்டமாக, சென்னை உட்பட முக்கிய நகரங்களை இணைக்கும், 1,000 அரசு விரைவு பஸ்களில், இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உ ள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement