சரிவு பாதையில் கடன் பத்திரங்கள் இப்போது முதலீடு செய்யலாமா?
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாததால் கடன் பத்திரங்களின் விலை சரிவை இந்திய அரசு சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய கடன் பத்திர சந்தையில் நெகிழ்வுத்தன்மை காணப்படுகிறது. சந்தையின் கவனம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள ரிசர்வ் வங்கியின் வட்டி வீத அறிவிப்பு மற்றும் இன்றைய புதிய கடன் பத்திர விற்பனை மீது திரும்பியுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பே சந்தையின் அடுத்தகட்ட திசையை தீர்மானிக்கும் என, சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை தொடர்ந்தால் கடன் பத்திர சந்தையில் தற்காலிக விலை சரிவுகள் வரக்கூடும்.

தற்போதைய நிலை
அமெரிக்க 10 ஆண்டு அரசு பத்திரங்களின் வருவாய் விகிதம் 4.70 சதவீதமாக உயர்ந்ததால், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் அரசு பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, இந்திய கடன் பத்திரங்களின் விலை சரிந்ததால், 10 ஆண்டுகால அரசு பத்திரத்தின் வருவாய் விகிதமும் 6.81 சதவீதமாக உயர்ந்தது.
@quote@ தொடர்ந்து கண்காணியுங்கள்
நீண்ட கால நிலையான வருமானத்திற்கும், பாதுகாப்பிற்கும் முதலீட்டு தொகையில் ஒரு பகுதியை அரசு மற்றும் தரமான நிறுவன கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். மத்திய, மாநில அரசு கடன் பத்திரங்களை நீண்ட காலத்திற்கு பரிசீலிக்கலாம். குறைந்தபட்சம் 'ஏ அல்லது ஏஏ' தரவரிசை கொண்ட கடன் பத்திரங்களை தேர்வு செய்வது அவசியமாகும்; அதிக வட்டிக்கு ஆசைப்படாமல் 'பிபிபி, பி' போன்ற குறைந்த தரவரிசை கடன் பத்திரங்களை தவிர்க்க வேண்டும். மேலும், தரவரிசையை தொடர்ந்து கண்காணிப்பது முக்கியம். பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட, குறிப்பிட்ட காலத்தில் வட்டி வழங்கும் மற்றும் எளிதாக விற்கக்கூடிய கடன் பத்திரங்களை தேர்வு செய்வது முக்கியமான விஷயம்.
- வ.நாகப்பன், நிதி எழுத்தாளர்quote
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'வீ த லீடர்ஸ்' சார்பில் விழிப்புணர்வு பேரணி
-
செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்து பயிற்சி
-
ஈரோடு சம்பத் நகரில் புதியதாக அரசுப்பள்ளி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
-
ஆடிப்பெருக்கையொட்டி காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு
-
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்
-
தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை
Advertisement
Advertisement