மண் எடுக்க மறுப்பு விவசாயிகள் அதிருப்தி

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சிக்குட்-பட்ட விவசாயிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க, அரசு விதிமுறைப்படி விண்ணப்பித்திருந்-தனர்.

வண்டல் மண் எடுக்க தயாரான நிலையில், பி.டி.ஓ., அலு-வலக அதிகாரிகள், வண்டல் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்-ளது என்றும், வண்டல் மண் எடுக்கக்கூடாது எனவும் கூறியதால் அதிருப்தியடைந்தனர்.இதுகுறித்து, தாசில்தார் பிரகாஷ் கூறுகையில், ''இதுகுறித்து சம்-பந்தபட்ட அதிகாரிகள் வசம் பேசி, விவசாயிகள் வண்டல் மண் எடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement