ரேஷன் கார்டுக்கு நான்கு ஆண்டுகளாக அலைக்கழிப்பு... கண்டுகொள்ளாத அதிகாரிகள்: மூதாட்டி குடும்பத்தினர் கண்ணீர்
பல்லடம்: பல்லடம் அருகே, கூலித்தொழிலாளி பெண் ஒருவர், செயலிழந்த ரேஷன் கார்டு மற்றும், ஆதார் கார்டு பெறுவதற்காக, 4 ஆண்டுகளாக போராடி வருவதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
பல்லடம் ஒன்றியம், பருவாய் ஊராட்சி, கிறிஸ்துராஜபுரத்தை சேர்ந்த கிட்டுசாமி மனைவி சங்கரீஸ்வரி, 50. மகன் பத்மேஸ்வரன், 20. கோவை அரசு கலைக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கிட்டுசாமி, 2023ம் ஆண்டு இறந்தார். இதனால், ரேஷன் கார்டில், இவரது பெயர் நீக்கப்படும்போது, சங்கரீஸ்வரி, பத்மேஸ்வரன் பெயர்களும் நீக்கப்பட்டது. இதனால், தாய் மற்றும் மகன் ஆகிய 2 பேரின் ஆதார் அட்டையும் செயலிழந்த நிலையில், இதற்கான காரணம் கேட்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து வருகின்றனர்.
இது குறித்து, சங்கரீஸ்வரி கூறியதாவது:
கடந்த, 2023ம் ஆண்டு எனது கணவர் காலமானார். இதனையடுத்து, ரேஷன் கார்டில் அவரது பெயர் நீக்கப்பட்டபோது, எங்கள் பெயரும் சேர்த்து நீக்கப்பட்டது.
இது குறித்து ரேஷன் கடையில் கேட்டதற்கு, உங்கள் ஆதார் செயலிழந்துள்ளதாக கூறினர். ஆதார் மையத்தில் விசாரித்ததற்கு, ரேஷன் கடையில்தான் உங்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஆதார் செயலிழந்துள்ளதால், ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்றனர். இதற்காக, சொந்த ஊரான மதுரை சென்று ஆதார் பதிவு செய்து வந்தோம். அதிலும் தீர்வு கிடைக்கவில்லை.
இப்படியே வி.ஏ.ஓ., தாலுகா ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ், ஆதார் மையம் என, நாங்கள் போகாத அலுவலகங்களே இல்லை. ஆனாலும், நான்கு ஆண்டுகளாக ஆதார் அட்டையும், ரேஷன் கார்டும் கிடைக்கவில்லை. இதனால், காஸ் சிலிண்டர் கிடைக்காமல் விறகு அடுப்பில்தான் சமைத்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பத்மேஸ்வரன் கூறுகையில், ''எனது தாயார் கூலி வேலை செய்து என்னை படிக்க வைத்து வருகிறார். 'ஸ்காலர்ஷிப்' வாயிலாக கல்லுாரியில் படித்து வருகிறேன்.
ஆதார் கார்டு இல்லாததால், 'ஸ்காலர்ஷிப்' பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
@quote@ வி.ஏ.ஓ., தாலுகா ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ், ஆதார் மையம் என, நாங்கள் போகாத இடங்களே இல்லை. ஆனாலும், நான்கு ஆண்டுகளாக ஆதார் கார்டும், ரேஷன் கார்டும் கிடைக்கவில்லைquote
ஸ்காலர்ஷிப் ரத்து ஆகும்? கூலி வேலைக்குச் செல்லும் சங்கரீஸ்வரி, தனது வருமானத்தில் மகனை படிக்க வைத்து வருகிறார். ஆதார் அட்டையின்றி, 'ஸ்காலர்ஷிப்' ரத்து செய்தால், மகனை படிக்க வைப்பதிலும் சிக்கல் ஏற்படும். ஒருபுறம் ரேஷன் கார்டு இல்லாமல் அத்தியாவசிய பொருட்களை பெற முடியவில்லை. மற்றொரு புறம், ஆதார் இல்லாமல், மகனை படிக்க வைப்பதிலும் சிக்கல் என, 4 ஆண்டுகளாக இதற்காக போராடி வருகிறேன்.
- சங்கரீஸ்வரி
மேலும்
-
தொழில் நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தம்; முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து
-
ஆக.,12ம் தேதி சூரிய கிரகணம்; நேரலை செய்வதாக நாசா அறிவிப்பு
-
லோக்சபா தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடங்கியது; எதிர்க்கட்சிகள் கடும் அமளி
-
ஆன்லைன் மூலம் அனைத்து டெண்டர்களும் வெளியிடப்படும்; அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
-
எல் நினோ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைத்தது தமிழக அரசு
-
டாஸ்மாக் ஊழல் வழக்கு; செந்தில் பாலாஜி முன் ஜாமின் மனு தள்ளுபடி