தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க 2வது மாநாடு
குமாரபாளையம்: தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க, பள்ளிப்பா-ளையம் பொன்னி சர்க்கரை ஆலையின், இரண்டாவது மாநாடு குமாரபாளையத்தில் நடந்தது. உதவி தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில தலைவர் முருகன் துவக்கி வைத்தார். பகுதி குழு செயலாளர் குருசாமி தீர்மானங்களை வாசித்தார்.
மாநாட்டில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் முன்னிலையில், புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது.பின், புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநில செயலாளர் துரைசாமி பேசினார். தலைவராக தங்கராசு, செயலாளராக குரு-சாமி,
பொருளாளராக துரையன், துணை தலைவராக மகேஸ்வரி, துணை செயலாளராக ராஜூ உட்பட, 15 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில், கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு, விஷ பூச்சிகள் கடித்து இறப்பு ஏற்பட்டால், தமிழக அரசு இழப்பீடாக, 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். கரும்பாலை நிர்வாகம், தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
மேட்டூர் கிழக்குக்கரை கால்வாய் பாசனத்திற்கு, தமிழக அரசு, கர்-நாடகா அரசுடன் பேசி பாசன விவசாயிகள் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்க போர்க்கால அடிப்படையில், வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். கரும்பாலை நிர்வாகம், கரும்பு வெட்டுவதற்கு முன்பாக நெருப்பு வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். கரும்பு கட்டும் தொழிலாளர்களுக்கு, தமிழகத்தில் தனி நல வாரியம் அமைக்க வேண்டும். கரும்பு வெட்டும் தொழி-லாளர்களுக்கு, உள்ளூர் தொழிலாளிகளுக்கு ஒருவிதமான கூலி, வெளி மாநில தொழிலாளர்களுக்கு ஒரு விதமான கூலி என்பதை தவிர்த்து ஆண், பெண் தொழிலாளர்களுக்கு கூலி நிலைமையை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும்
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்
-
ரேஷன் கார்டுக்கு நான்கு ஆண்டுகளாக அலைக்கழிப்பு... கண்டுகொள்ளாத அதிகாரிகள்: மூதாட்டி குடும்பத்தினர் கண்ணீர்