இரவில் சாயக்கழிவுநீரை வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எப்போது?

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் விதிமீறி செயல்படும் சாய ஆலைகள் மீது குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதி-காரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.


பள்ளிப்பாளையத்தில் சமயசங்கிலி, களியனுார், ஆவத்திபா-ளையம், ஒட்டமெத்தை, பெரியகாடு, நேருநகர், அக்ரஹாரம், ஆண்டிக்காடு, டி.வி.எஸ்., மேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகு-தியில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்படுகின்றன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து, விதி மீறி சாயக்கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் சாயக்கழி-வுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால், ஆற்று தண்ணீர் மாசடைகிறது.
இந்த மாசடைந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு கேன்சர், கிட்னி பாதிப்பு, தோல் நோய், அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. புதிய ஆட்சி அமைந்த-வுடன், கடந்த ஜூன், 2ல் சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ், பால்-வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோர், பள்ளிப்பா-ளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளில் ஆய்வு செய்து, விதிகளை மீறி செயல்படும் சாய ஆலைகள் மீது நடவ-டிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இந்த ஆய்வுக்கு பின், சாய ஆலைகள் செயல்
படாமல் இருந்தன.
இந்நிலையில், செயல்படாமல் இருந்த சாய ஆலைகள், கடந்த ஓரிரு வாரங்களாக மீண்டும் செயல்பட தொடங்கி, இரவில் சாயக்-கழிவுநீரை வெளியேற்றி வருவதாக புகார் எழுகின்றன. ஆனால், குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள், சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்-ளனர்.

Advertisement