சிறையில் கணவர்; விபத்தில் மனைவி பலி குழந்தை தவிப்பால் நிவாரணம் கேட்டு மறியல்
சேலம்: போதை மாத்திரை விற்ற விவகாரத்தில் கணவர் சிறையில் உள்ள நிலையில், மனைவி விபத்தில் பலியானார். இதனால் அவர்களது ஒரு வயது குழந்தை தவிக்க விடப்பட்டுள்ளதால், உரிய நிவா-ரணம் கேட்டு, உறவினர்கள், திருநங்கையர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம், அஸ்தம்பட்டி, மணக்காட்டை சேர்ந்தவர் சித்திக் அலி, 24. இவரது மனைவி ஷாலினி, 20. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. சில நாட்களுக்கு முன் சித்திக் அலி, போதை மாத்திரை விற்ற விவகாரத்தில் சூரமங்கலம் போலீ-சாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்-கப்பட்டுள்ளார்.
அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், இரு நாட்களுக்கு முன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். அவரை பார்க்க நேற்று முன்தினம் ஷாலினி, உறவினர் சூர்யாவுடன் பைக்கில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, மரவ-னேரி சாலையில் விபத்து ஏற்பட்டது. அதில் அரசு பஸ்சின் பின்-சக்கரம் ஏறி ஷாலினி உயிரிழந்தார்.நேற்று காலை, 10:45 மணிக்கு ஷாலினியின் உறவினர்கள், திரு-நங்கையர், சுந்தர் லாட்ஜ் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன், ஷாலினியின் குழந்தையை வைத்து, சாலை மறியலில் ஈடுபட்-டனர். உரிய நிவாரணம் கேட்டு கோஷம் எழுப்பினர். சில திரு-நங்கையர், சாலையில் படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அஸ்தம்பட்டி போலீசார், தாசில்தார் சிவராமன் பேச்சு நடத்தினர். அப்போது உடன்
படாமல், தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒருவழியாக சமாதானம் அடைந்தனர். பின் கலெக்டரை சந்திக்க அனுமதி கேட்டு, அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவ-லகம் சென்றனர். அங்கு போலீசார், 4 பேரை மட்டும் கலெக்-டரை சந்திக்க அனுமதி அளித்தனர். பின் உதவி கலெக்டரை சந்-தித்து, அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; குழந்தைக்கு உரிய நிவாரணம் வேண்டும் என, கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு உதவி கலெக்டர், பரிசீ-லனை செய்யப்படும் என கூறியதால், அவர்கள் கலைந்து சென்-றனர்.
மேலும்
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்
-
ரேஷன் கார்டுக்கு நான்கு ஆண்டுகளாக அலைக்கழிப்பு... கண்டுகொள்ளாத அதிகாரிகள்: மூதாட்டி குடும்பத்தினர் கண்ணீர்