பக்தர்களுக்கு வசதிகள்: முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை: 'கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, எவ்வித குறைபாடுமின்றி செய்து தர வேண்டும்' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கோவில் நிர்வாகம் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம், தலைமைச் செயலகத்தில் நடந்தது.
கூட்டத்தில், 'ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், எந்தவித சிரமமும் இல்லாமல் சாமி தரிசனம் செய்து திரும்புவதை, அரசு உறுதி செய்ய வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, போதுமான எண்ணிக்கையில் கழிவறை அமைப்பதுடன், அவற்றை துாய்மையாக பராமரிக்க, போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். கோடை காலம் மற்றும் விசேஷ நாட்களில், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.
'முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு, தரிசனத்தில் முன்னுரிமை அளிக்கும் வகையில், தனி வழிகள் உருவாக்க வேண்டும். கோவில் வளாகங்களை, துாய்மையாக வைத்திருக்க வேண்டும்' என, முதல்வர் கூறியதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் பார்ப்போம்
சும்மா நாடகம் ஆடாதே - vatican கைக்கூலியே -
முதலில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை அரச விழாவாக அறிவித்து தீபம் ஏற்று
திருப்பரங்குன்ற மலை வளாகத்தில் மற்ற மத STRUCTURE & ஆக்கிரமிப்புகளை அகற்று
ஹிந்துக்கள் கோவில் நிர்வாகத்தை - ஹிந்துக்களே செய்து கொள்வார்கள் - உன்னைப்போன்ற அரசியவாதிகள் ரொம்ப அக்கறை உள்ளதுபோல் நாடகம் ஆடவேண்டாம்
சனாதனத்திற்கு எதிராக கொள்கைகளையும் காரியங்களையும் நிறுத்து.
அல்லது கெஜ்ரி, மம்தா, உத்தவ் , ரெட்டிகாரு - போன்றவர்களின் கதிதான் உனக்கும். .
இதே உத்தரவை ச்டாலின் கூட 4 ஆண்டுகள் முன்பு வெளியிட்டார். இந்த மாதிரியான அறிவிப்பால் ஒரு மாற்றமும் இருக்காது. கோவில் வளாகத்துக்கு வெளியே தான் கழிப்பறை இருக்கவேண்டும். தெரிந்தவர்களிடம் அறிவுரை கேட்டு உத்தரவிடவும்.
எல்லாம் சரி ஹிந்து கோவில்களின் வருமானதிலிருந்து சம்பளம் பெறும் ஹிந்து அறநிலைய துறையே ஹிந்துக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றுள்ளது ,ஹிந்துகோவில்களுக்கு எதிராக கோவில்களின் பணத்தைவைத்தே வழக்கு நடத்துவது என்ன அர்த்தம் என்றும் சொன்னால் மக்களுக்கு உங்களை நன்கு புரியும்.செய்வீர்களா?மேலும்
-
லாபத்தை வெளியே எடுப்பதற்கான விற்பனை வரலாம
-
ஒரே நாளில் 3 முறை 'குளோசிங்' : பங்குச்சந்தையில் அறிமுகமாகும் புதிய முறை
-
'மீஷோ' பங்கு விலை 30% உயரும்: 'மோதிலால் ஓஸ்வால்' கணிப்பு
-
ஐ.பி.ஓ.,: 'மணிபால் ஹெல்த்' பங்கு வெளியீடு
-
கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் முறைகேடு; செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்
-
ஒரு வேலை.. 80 பேர் போட்டி! ஒப்பந்த பல் மருத்துவர் பணி; கலெக்டர் ஆபீசில் நேர்காணல்