ஒரே நாளில் 3 முறை குளோசிங்: பங்குச்சந்தையில் அறிமுகமாகும் புதிய முறை

இந்திய பங்குச்சந்தையில் இனி ஒரே நாளில் மூன்று வெவ்வேறு முடிவு நேரங்கள் அறிமுகமாகின்றன. இதுவரை மாலை 3:30 மணிக்கு அனைத்து வர்த்தகங்களும் நிறைவடைந்து வந்த நிலையில், புதிய ஏல முறை வர்த்தகம் காரணமாக இனி 'எப் அண்டு ஓ' பிரிவிலும் உள்ள பங்குகளுக்கான வர்த்தகம் மாலை 3:15 மணிக்கு நிறைவடையும் என செபி தெரிவித்துள்ளது.

எப் அண்டு ஓ., பிரிவில் இல்லாத பங்குகளுக்கான வர்த்தகம் 3.30 மணிக்கும், டெரிவேட்டிவ்ஸ் ஒப்பந்தங்கள் மாலை 3:40 மணிக்கும் வர்த்தகத்தை நிறைவு செய்யும் எனவும் செபி கூறியுள்ளது.

இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதன்வாயிலாக 'குளோசிங் ஆக்சன் செஷன்' என்ற நியூயார்க், லண்டன் சந்தைகளில் உள்ள புதிய ஏல முறை அறிமுகமாகிறது.

தற்போது கடைசி 30 நிமிட பரிவர்த்தனை சராசரி விலையை அடிப்படையாக கொண்டு இறுதி விலை கணக்கிடப்படும் நிலையில், புதிய முறையில் வாங்கும் விற்கும் ஆர்டர்கள் சேகரிக்கப்பட்டு ஒரே சமநிலை விலையில் பொருத்தி வர்த்தகம் செய்யப்படும்.

@quote@ வருவாய் குறையலாம் பங்கு தரகு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு நிதி நிலவரங்கள் கவனிக்கப்படுவதால், இப்புதிய மாற்றங்களால் அவற்றின் தரகு வருவாயில் 1 முதல் 5 சதவீதம் வரை சரிவு ஏற்படக்கூடும். எனினும், சந்தையின் வெவ்வேறு பிரிவுகள் வெவ்வேறு நேரங்களில் நிறைவடைவதை சிறு முதலீட்டாளர்களுக்கு புரிய வைப்பதே தரகு நிறுவனங்களின் உடனடி சவாலாக இருக்கும். - நிதின் காமத் இணை நிறுவனர், ஜீரோதா (எக்ஸ் தள பதிவு)quote

@quote@ சாதகமான மாற்றம் ரொக்க சந்தையில் மாலை 3:15 முதல் 3:35 மணி வரை ஏல நேரம் செயல்படுவதால், 3:30 மணிக்கு முடியும் முன்பேர வர்த்தகர்களுக்கு கடைசி 5 நிமிட விலை மாற்றங்களை எதிர்கொள்வதில் பின்னடைவு இருந்தது. தற்போது மாலை 3:40 மணி வரை நீட்டிக்கப்படுவதால், இறுதி விலை மாற்றங்களுக்கு ஏற்ப அபாயத்தை குறைக்கவும் மேலாண்மை செய்யவும் வாய்ப்பு கிடைக்கும். இது சாதகமான மாற்றமாகும். - ரெஜி தாமஸ் பங்குச்சந்தை நிபுணர்quote

@block_B@ பயன்கள் நிப்டி, சென்செக்ஸ் குறியீடுகள், மியூச்சுவல் பண்டு என்.ஏ.வி., மதிப்பு மற்றும் ஒப்பந்த முடிவுகளுக்கு இறுதி விலையே அடிப்படையாகும். புதிய ஏல முறையில் தேவை மற்றும் வினியோகம் கணக்கிடப்பட்டு துல்லியமான விலை கண்டறியப்படும். மேலும் பெரிய முதலீட்டு நிறுவனங்களுக்கு இம்மாற்றம் பயனுள்ளதாக இருப்பதுடன், கடைசி நேர பெரிய ஆர்டர்களால் ஏற்படும் திடீர் விலை மாற்றங்களும் 'டிராக்கிங் எரர்' ஆபத்தும் தவிர்க்கப்படும்.block_B

நேரங்களில் மாற்றங்கள்





'எப் அண்டு ஓ' பிரிவில் உள்ள பங்குகளுக்கான சாதாரண ரொக்க வர்த்தகம் மாலை 3:15 மணிக்கு நிறைவடையும்

'எப் அண்டு ஓ' பிரிவில் இல்லாத மற்ற சாதாரண பங்குகள் வழக்கம் போல மாலை 3:30 மணி வரை வர்த்தகமாகும்

இண்டெக்ஸ் மற்றும் 'எப் அண்டு ஓ' ஒப்பந்தங்களுக்கான வர்த்தக நேரம் 10 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டு மாலை 3:40 மணி வரை நடைபெறும்

மாலை 3:15 மணி முதல் 3:35 மணி வரை இறுதி விலை நிர்ணயத்திற்கான புதிய ஏல முறை வர்த்தகம் நடைபெறும்

மாலை 3:50 மணி முதல் 4:00 மணி வரை சந்தைக்கு பிந்தைய வர்த்தகம் வழக்கம்போல இறுதி விலையில் நடைபெறும்.

Advertisement