'மீஷோ' பங்கு விலை 30% உயரும்: 'மோதிலால் ஓஸ்வால்' கணிப்பு

வேகமாக வளர்ந்து வரும் இ-காமர்ஸ் துறையில் அதிக பலன் பெறக்கூடிய நிறுவனமாக 'மீஷோ' இருக்கும் என பங்குச்சந்தை தரகு நிறுவனமான 'மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ்' தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி வாய்ப்பை கருத்தில் கொண்டு, மீஷோ பங்குகளை வாங்கலாம் என்று பரிந்துரைத்துள்ள அந்நிறுவனம், ஒரு பங்கின் இலக்கு விலையை 240 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.

அதாவது தற்போதைய விலையில் இருந்து 30 சதவீதம் வரை உயரக்கூடும் என கூறியுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் ஆன்லைன் சில்லரை வர்த்தகத்தின் பங்கு 7 சதவீதம் மட்டுமே. இதுவே சீனாவில் 34 சதவீதமாகவும், அமெரிக்காவில் 17 சதவீதமாகவும் இருக்கிறது. எனவே, நம் நாட்டில் இ-காமர்ஸ் சந்தை வளர்ச்சி ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

சிறிய நகரங்களில் வலுவான நிலை இருப்பது மீஷோவுக்கு கூடுதல் பலம். தற்போது நிறுவனத்தில் 27.40 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 88 சதவீதம் பேர், நாட்டின் முதல் 8 பெருநகரங்களுக்கு வெளியே வசிப்பவர்கள் என்பதால், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திறன் அதிகம்

விற்பனையாளர்களிடம் கமிஷன வசூலிக்காத வணிக முறை, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், குறைந்த செயல்பாட்டு செலவு, வலுவான பணப்புழக்கம் மற்றும் திறமையான லாஜிஸ்டிக்ஸ் வலை யமைப்பு ஆகியவை நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும்.

அதேநேரத்தில், 'அமேசான், பிளிப்கார்ட்' போன்ற நிறுவனங்களின் கடுமையான போட்டி, தயாரிப்பு தரத்தை பராமரிப்பதில் உள்ள சவால் கள், லாஜிஸ்டிக்ஸ் சேவையை அதிகம் சார்ந்திருப்பது மற்றும் எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் வளர்ச்சி இல்லாதது ஆகியவை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய இடர்களாக உள்ளது.

Advertisement