லாபத்தை வெளியே எடுப்பதற்கான விற்பனை வரலாம

நிப்டி மிட்கேப் 50 (எண்நேற்று 191 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி, தொடர்ந்து ஏற்றம் கண்டு நாளின் இறுதியில் 264 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ம் உயர்வுடனே முடிவடைந்தன.

இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப்100' குறியீடு அதிக பட்சமாக 1.48 சதவீதமும், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு குறைந்த பட்சமாக 0.45 சதவீத உயர்வுடன் காணப்பட்டன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 18 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 2.32 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ரியால்ட்டி குறியீடு அதிக பட்சமாக 0.33 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,441 நிறுவனங்களின் பங்குகளில் 2,129 ஏற்றத்துடனும்; 1,181 இறக்கத்துடனும்; 131 மாற்றம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்தன.

நிப்டி இச்சிமோகு க்ளெவுட் மற்றும் பெரும்பாலான முக்கிய குறுகிய கால சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே நிறைவடைந்துள்ளது. மொமென்டம் இண்டிக்கேட்டர்களில் ஆர்.எஸ்.ஐ., (56.11) மற்றும் ஸ்டோக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர் ஏற்றத்திற்கு சற்று ஆதரவாக உள்ளது.

எம்.ஏ.சி.டி., விற்பனை அழுத்தம் படிப்படியாக குறைந்து வருவதை காட்டுகிறது. இருப்பினும் பாஸ்ட் ஸ்டோக்காஸ்ட்டிக் ஓவர் பாட் நிலைமையை அடைந்துள்ளது. எனவே, லாபத்தை வெளியே எடுக்கும் நோக்கில் விற்பனை அழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது.

உடனடி ரெசிஸ்டென்ஸ் 24,285 என்ற லெவலிலும் அதற்கு அடுத்த ரெசிஸ்டன்ஸ் 24,370லும் இருக்கிறது. 24,370ஐ உறுதியாக கடந்தால், 24,500 வரை முன்னேறும் வாய்ப்பு உள்ளது. இறக்கம் வந்தால் 24,200ல் உடனடி சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதை தாண்டி இறங்கினால் 24,120-24,050 என்ற லெவலில் வலுவான சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. 24,050க்கு மேலே நிப்டி இருக்கும் வரை குறுகிய காலத்தில் ஓரளவு புல்லிஷாகவே இருக்கும் எனலாம்.

தற்போதைய டெக்னிக்கல் சூழலில் 24,285க்கு மேலே வலுவாக நிலைபெற்றால், ஏற்றம் மேலும் நீடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

Advertisement