ராமநாதபுரத்தில் குடும்ப பிரச்னையில் இரட்டை கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப பிரச்னையில் இரட்டை கொலை சம்பவம் அரங்கேறி பரபரப்பை கிளப்பி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் ஊராட்சி வைகை நகரை சேர்ந்தவர் செல்லமுத்து 31. இவர் துபாய் நாட்டில் வேலை பார்த்தார். தற்போது ஊருக்கு வந்துள்ளார். மனைவி சர்மிளா, 28, கருத்து வேறுபாடு காரணமாக பிரித்துள்ளார். இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இன்று காலை மனைவி உடன் தகராறு ஏற்பட்டது. அப்போது செல்லமுத்து ஆத்திரத்தில் அரிவாளால் மனைவி, மாமியார் பத்மாவதி 58, ஆகியோரை வெட்டி கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளார். எஸ்.பி. சந்தீஷ் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement