ஆண்டிபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆண்டிபட்டி, ஜூலை 31-

ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரோட்டின் ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து வைகை அணை ரோடு சக்கம்பட்டி ஆலமரம் பஸ் ஸ்டாப் வரை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் அமைத்திருந்தனர். கழிவுநீர் வடிகாலையும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் இருந்ததால் மழைக்காலத்தில் கழிவுநீர் செல்வதில் பாதிப்பும் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பாளர்களுக்கு சமீபத்தில் நோட்டீஸ் வழங்கியது. பலரும் இதனை கண்டு கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆண்டிபட்டி உதவி இயக்குனர் ராமமூர்த்தி, உதவி பொறியாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் ரோட்டின் ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

Advertisement