தெளி கிராமத்தில் அங்கன்வாடி கட்டடடம் லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
விழுப்புரம்: காணை அருகே தெளி கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
விழுப்புரம் அருகே காணை ஒன்றியத்திற்கு உட்பட்ட தெளி ஊராட்சி, அசிசி நகரில், பொது மக்களின் நீண்டகால கோரிக்கை ஏற்று, விழுப்புரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ.14.50 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது.
அங்கன்வாடி உணவுக்கூடம், சிறார் விளையாட்டு சாதனங்கள், வண்ண ஓவியங்களுடன் கூடிய அங்கன்வாடி படிப்பகத்துடன் புதிய கட்டடம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.
இந்த கட்டடத்தை, லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். குத்துவிளக்கேற்றி அங்கன்வாடி படிப்பகத்தையும் திறந்து வைத்து, சிறார்களுக்கு கல்வி உபகரணங்களை அவர் வழங்கினார். இதனையடுத்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில், காணை பி.டி.ஓ.,க்கள் முல்லை, அமுதலட்சுமி, தி.மு.க., காணை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், ஒன்றிய செயலர்கள் தெய்வசிகாமணி, ராஜா, நகர செயலர் வெற்றிவேல், காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் ஜெயா குமரன், ஊராட்சி மன்ற தலைவர் குமுதவள்ளி, தி.மு.க., நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, செல்வராஜ், சிவசங்கர், செல்வம், ரமணன், அறிவழகன், ஏழுமலை, ஜெயலட்சுமி, ஆரோக்கியதாஸ், மகிமை, வில்லியம், ராஜேஷ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.