வேளாண் புல மாணவர்கள் 144 பேருக்கு பணியாணை

சிதம்பரம் ஜூலை 31 -

 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் நடைபெற்ற நேர்காணலில் 144 மாணவர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டது.

ிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக,  வேளாண் புலம் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பில் வேளாண் பட்டதாரிகளுக்கு வளாக நேர்காணல் நடந்தது. இதில் மதுரை சத்யம் குழும நிறுவனங்கள், தான் பவுண்டேஷன் பார்ம்பெர்ட், லிங்கா கெமிக்கல்ஸ் மற்றும் கோரமென்டல் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.

  பல்வேறு கட்டத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் தேர்வான 144 பேருக்கு, துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் அறிவுடைநம்பி, பதிவாளர் சிங்காரவேல், டி.ஆர்.ஓ., ஜெகதீஸ்வரன் ஆகியோர் பணி நியமன ஆணைகள் வழங்கினர்.  நிகழ்ச்சியில், வேளாண் புல முதல்வர் ஹரிப்பிரியா, பயிற்சி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் இயக்குநரக இயக்குநர் பிரகதீஸ்வரன், இணை இயக்குநர் சிவசுப்ரமணி, பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் சண்முகராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement