அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்திய பள்ளி குழந்தைகள்
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நல்லூர் மலை கிராமம். இந்த கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 120 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இன்று பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சதீஷ் ராஜ் தலைமையில் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடக்கப்பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சிவகுமார் பொறுப்பு மற்றும் ஏற்காடு வட்டார கல்வி அலுவலர் கிரிஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளியின் நுழைவாயில் இந்தியா கேட் வடிவத்தில் பள்ளி குழந்தைகள் தயார் செய்து வைத்திருந்த நுழைவாயிலில் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
இந்த கண்காட்சியில் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் சந்திரயான் 3, ரபேல் போர் விமானம் மாதிரிகளை செய்து வைத்திருந்தனர். பாட புத்தகத்தில் உள்ள அனைத்து 100க்கும் மேற்பட்ட அறிவியல் செயல்பாடுகளை செய்முறையில் செய்து காட்டினர்.
பார்வையிட்ட மாவட்ட பொறுப்பு கல்வி அலுவலர் பள்ளி குழந்தைகளை வெகுவாக பாராட்டினார். இந்த அறிவியல் கண்காட்சியை மாணவ, மாணவிகளின் பெற்றோர், நல்லூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள அரசு பள்ளி குழந்தைகள் தனியார் பள்ளி குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டோர் கண்டு மகிழ்ந்தனர்.
தொடர்ந்து பள்ளி குழந்தைகள் சிலர் கண்காட்சியை காண வந்த பொதுமக்களுக்கு புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை குறித்து எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டு, விளக்கி கூறினர்.