டாஸ்மாக் ஊழல் வழக்கு; செந்தில் பாலாஜி முன் ஜாமின் மனு தள்ளுபடி
சென்னை: டாஸ்மாக் ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
மதுபான கொள்முதல், 'டெண்டர்' முறைகேடு, சட்ட விரோதமாக, 'பார்' நடத்தியது, டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜி தரப்பு
அப்போது செந்தில்பாலாஜி தரப்பில், ''முதல் தகவல் அறிக்கையில் செந்தில்பாலாஜிக்கு எதிராக குறிப்பிட்டு எந்த புகாரும் இல்லை; பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. டாஸ்மாக் அதிகாரிகள் செய்த குற்றத்துக்கும் செந்தில்பாலாஜிக்கும் தொடர்பில்லை'' என வாதிட்டனர்.
பிறகு போலீசார் தரப்பில், ''ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு என்பதால் விரிவான விசாரணை தேவை. புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் முன்ஜாமின் தரக்கூடாது'' என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தள்ளுபடி
இதையடுத்து, ''எதன் அடிப்படையில் முன் ஜாமின் கோருகிறீர்கள்; காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது'' என ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த, முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
@block_P@
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மேல்முறையீடு செய்து உள்ளார். நாளை (ஜூலை 31) பட்டியலிட்டு, விசாரணைக்கு ஏற்பதாக சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவித்தார்.block_P
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
செந்தில் பாலாஜி தலையில் பேரிடி; டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் ஐகோர்ட் மறுத்தது குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
எவ்வளவு பெரிய நபராக இரூந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்
Anticipatory bail application by Mr.Senthil Balaji was dismissed by Madras HC, today. Today itself, appeal has been filed in SC, which has agreed to hear the same tommorrow.
Unfortunately, iin India, all are not such quick attention of HC/SC - to get their grievances attended to by Higher Courts.
Still, we proclaim, in the eyes of law, all are equal.
சாமானியன் வழக்கு தலைமுறை தலைமுறையாக தீர்வு இல்லாமல் இழுத்தடிக்கப்படுவதை பற்றி எந்த நீதிமானும் கவலைப்படுவதில்லை. ஆனால் களவாணிகள் ஊழல் பேர்வழிகள் அயோக்கிய சிகாமணிகள் ஜாமீன் கோரிக்கையை காதுகொடுத்துக் கேட்க நீதிமன்றத்தின் கதவுகள் நள்ளிரவிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். இந்த சட்டங்களும் அவற்றை நிலைநிறுத்துகிறவர்களும் மக்களின் பாதுகாவலர்களாம்.
கையிலே பணமிருந்தால் கம்மினாட்டியும் நல்லவன் தான் அநீதிமன்றத்தில் இப்படி இருக்கின்றது அநீதிபதிகளின் தீர்ப்பு. இந்த அநீதிமன்ற அநீதிபதிகள் உள்ளவரை இந்த ஊழல் வழக்குகள் தொடரும் ஒரு முடிவு தீர்வு இல்லாமல்
u know ex chief mister j jayalalitha. no money no money she is a accused.
எங்கே அந்த பாலு, செபா
செந்தில் பாலாஜியை கண்டால் ஏன் தவெகவிற்கு இவ்வளவு பயம் . ஆட்சிக்கு வந்து 80 நாட்கள் ஆகின்றது இவரை சிறைக்கு அனுப்புவதற்கான முயற்சியில் மட்டும் முழுநேரத்தையும் சிலவு செய்துகொண்டிருக்கிறார்கள் .வேறேதாவது ஆக்கபூர்வமான வேளைகளில் கவனம் செலுத்தலாமே .
உப்பை தின்னவர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.
உச்ச நீதிமன்ற நீதிபதி துட்டு வாங்கிட்டாரு. அதுக்குள்ள நாளை விசாரணைக்கு வருது. உள்குத்து இருக்கு. செந்தில்பாலாஜி பணம் இந்தியா முழுவதும் பாயுது. இன்னும் கொஞ்சநாளில் வெளிநாடுகளிலும் பாயும்.
ஞாபகம் வருதே..
ஸ்டாலின்: செந்தில் பாலாஜி ன்னு ஒருத்தர்.. இவர் கெட்ட கேட்டுக்கு முதலமைச்சர் லிஸ்டில இவர் பேரும் இருந்தது..