ரகளை செய்த வாலிபர் கைது

புதுச்சேரி: கோவில் எதிரில் ரகளையில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காலப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சின்ன கொழுவரி பகுதியைச் சேர்ந்த சுதாகர், 39, என்பவர் மது போதையில், பெரிய காலப்பட்டு முருகன் கோவில் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுப்பட்டார்.

அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisement