திரிணமுல் காங்கிரஸ் ஆதரவாளர் வீட்டில் அள்ள அள்ள பணம்: ரூ.29 கோடி பறிமுதல்
கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில், 29 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,வின் நெருங்கிய கூட்டாளியும், குவாரி அதிபருமான துலு மொண்டலை போலீசார் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரி நடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிர்பும் மாவட்டத்தைச் சேர்ந்த கல் வியாபாரி துலு மொண்டல், திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அனுபிரதா மொண்டலின் நெருங்கிய ஆதரவாளராக அறியப்படுகிறார். அவரது உறவினரான மினார் மொண்டல் முன்னாள் அரசு பஸ் டிரைவராக பணியாற்றியவர். தற்போது துலு மொண்டலுக்கு உதவியாக குவாரி தொழிலை நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், துலு மொண்டல் மற்றும் அவரது கூட்டாளிகள் சட்டவிரோதமாக பணம் மற்றும் தங்கத்தை மினார் மொண்டல் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் நேற்று இரவு மினார் மொண்டல் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். முதலில் 20 கோடி ரூபாய் ரொக்கம், 15 கிலோ தங்கம் சிக்கியதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து இன்று காலை வரை விடிய விடிய நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு 29 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வீட்டில் பணத்தை மூட்டை கட்டி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மினார் மொண்டல் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவாக உள்ள குவாரி உரிமையாளர் துலு மொண்டலை போலீசார் தேடி வருகின்றனர்.
இதெல்லாம் திமுக அமைச்சர்களின் கால்தூசுக்ககாது.
நம்ம ஆட்களே தேவலை போல இருக்கிறதே. அரசியல் வாதிகள் போட்டி போட்டுகொண்டு கொள்ளை அடித்துள்ளார்கள்
தி.மா.குடும்பத்திலும் தமிழகத்தில் கிடைக்கலாம்