விபத்தில் ஒருவர் பலி

தேவகோட்டை, ஜூலை 31 -

திருவாடானை மாவிலங்கைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சந்தோஷ். 20 ., டிரைவர்.

நேற்று முன்தினம் இரவு பனங்குளம் வந்து விட்டு டூவீலரில் மாவிலங்கைக்கு சென்றார். புளியால் இருமதி அருகே டூவீலர் விபத்துக்குள்ளானதில் சந்தோஷ் சிகிச்சைக்காக சிவகங்கை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

தேவகோட்டை மேலகாவனவயலைச் சேர்ந்த விசுவாசம். 68., இவர் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயம் அடைந்தார். காயம்பட்ட விசுவாசம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement