எல் நினோ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைத்தது தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் எல் நினோ தாக்கம் குறித்து ஆராய்வதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எல் நினோ தாக்கத்தினால் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் முருகானந்தம் தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், அண்ணா பல்கலை காலநிலை மாற்றத்துறை தலைவர் எஸ்.கண்மணி உள்ளிட்ட 7 பேர் இடம்பெறுகின்றனர்.
மழை அளவு, வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு இந்தக் குழு பரிந்துரைகளை வழங்கும். மேலும், வெயில் மற்றும் வறட்சியால் எளிதில் பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறிந்து இந்தக் குழுவினர் எச்சரிக்கை விடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்-நினோ என்றால் என்ன?
கடலின் மேற்பரப்பு வெப்பம் சராசரிக்கும் அதிகமாக இருந்தால் எல்-நினோ ஏற்படும். அதாவது, கடல் வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிப்பதால் ஏற்படும் விளைவு. எல் நினோ தாக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளில் பெருமழை, வறட்சி உள்ளிட்டவை ஏற்படும் என, உலக வானிலை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சிறப்பு வீடியோ!
எல் நினோவுக்காக கண்காணிப்பு குழு அமைப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்