ஆன்லைன் மூலம் அனைத்து டெண்டர்களும் வெளியிடப்படும்; அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
சென்னை: கோவில் பணிகளுக்கு புதிய டெண்டர் வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன; ஆன்லைன் மூலம் அனைத்து டெண்டர்களும் வெளியிடப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: பெரிய பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்காமல், அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற முறையில், கோவில் பணிகளுக்கு புதிய டெண்டர் வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து கோவில்களுக்கும் டெண்டர் விண்ணப்பங்களில் ஒரே மாதிரியான படிவங்கள் கொண்டு வந்து இருக்கிறோம். 40 நாட்களாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கொண்டு வந்து இருக்கிறோம். ஹிந்து அறநிலையத்துறையின் அனைத்து டெண்டர்களும் இனி ஆன்லைனில் நடக்க போகிறது. இனிமேல் அனைத்து கோவில்களுக்கும் பொதுவான டெண்டர் முறை தான். ஆன்லைனில் டெண்டருக்கான ஒப்பந்த புள்ளி கோருவது நடக்கும். அதற்கான ஏலமும் ஆன்லைனில் நடக்கும்.
அனைத்து டெண்டர்களுக்கும் ஜிஎஸ்டி, பான், கட்டாயம். விலை பட்டியல் சரியாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். இதன் மூலம் சரியான விலைக்கு தான் விற்பனை செய்கிறார்களா என்று கண்காணிக்க முடியும். பார்க்கிங் பொறுத்தவரைக்கும் நிறைய இடங்களில் இருந்து புகார்கள் வருகின்றன.
ஒரு கோவிலில் 100 ரூபாய் வாங்குகிறார்கள்; ஒரு கோவிலில் 200 ரூபாய் வாங்குகிறார்கள் என நிறைய புகார்கள் வருகின்றன. டிஜிட்டல் முறையில் பில்லிங் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான டெண்டர்களும் கொண்டு வந்து இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.
@block_Y@
பழநி நில மோசடி விசாரணை குறித்து அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: பழநி விவகாரத்தில் மிக தீவிரமாக விசாரணை போய் கொண்டு இருக்கிறது. முதல்வர் விஜயிடம் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று நான் தான் சொன்னேன். அப்பொழுது தான் நேர்மையாக குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் நிலத்தை விற்றவர்கள், வாங்கியவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிச்சயமாக யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் நமது அரசு நடவடிக்கை எடுக்கும். என் மீது பொய் பரப்பி கொண்டு இருந்தார்கள்.
அதிமுக ஐடி பிரிவினர் என்னுடைய உறவினர்கள் அந்த நிலத்தை வாங்கியதாக கூறுகிறார்கள்.
என் குடும்பத்தில் இருக்கும் யாரிடமும் ரூ. 2 கோடி பணமே கிடையாது; அப்படியே இருந்தாலும் நாங்களே வாடகை வீட்டில் இருக்கிறோம்; சென்னையில் வீடு வாங்காமல் ஏன் பழநியில் வாங்க போகிறோம். இது எல்லாம் உதாரணத்திற்கு சொல்கிறேன்.
ஏதாவது ஒரு காரணத்தை வைத்து எனது பெயரையும், புகழையும் கெடுக்க நினைக்கிறார்கள். சீப்பை திருடிவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் மாதிரி, சீப்பு திருடும் வேலையை பண்ணி கொண்டு இருக்கிறார்கள். தயவு செய்து சீப்பு திருடும் வேலையை விட்டு விட்டு, மக்களுக்காக யோசித்தால் ரொம்ப நல்ல விஷயங்கள் செய்ய ஆரம்பிக்கலாம். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.block_Y
எல்லா இடங்களிலும் சிண்டிகேட் இருக்கும்,,, அவர்கள் தான் முடிவு செய்வார்கள்
நமது தமிழ்நாட்டில் தரம் சரியாக இருந்தால் வருமானம் அதிகமாக இருக்கும். நாடெங்கும் இருக்கும் ஒரு சில ஹோட்டல்களில் கூடும் கூட்டமே இதற்கு சான்று. இந்த அடிப்படையில் அறநிலையத்துறை நிர்வாகம் செய்யும் கோவில்களில் கட்டண தரிசனமுறையை ஒழிக்கவேண்டும். அனைவரும் ஒரே வரிசையில் செல்லுமாறு நிர்பந்திக்கவேண்டும். கூட்டம் அதிகமாக வரும் கோவில்களுக்காக சிறப்பு தரிசன முறையை உருவாக்கலாம். வெளியூரில் வருபவர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக தனியாக காலை மூன்று மணிநேரமும் மாலை மூன்று மணிநேரமும் ஒதுக்கலாம். அதற்கு ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்ப்பிக்கவேண்டும் என்று விதிமுறை இருந்தால் கூட்டங்கள் கூடுவதை தவிர்க்கலாம். இப்போது பத்து ருபாய் டீ க்கு கூட ஜீ பெ பண்ணுகிறார்கள். எனவே கோவில்களில் உண்டியல் தவிர மற்ற நன்கொடை அனைத்தும் ஆன்லைன் மூலமே வாங்கவேண்டும். கோவில்களில் பக்தர்களுக்காக வசதிகளை மேம்பபடுத்தினால் கட்டணங்களை அதிகப்படுத்துவதில் தவறில்லை. பெரிய பெரிய பணக்காரர்கள் இறைவனுக்காக நன்கொடை அதிகம் தருகிறார்கள். அவர்களிடம் பணம் வசூலிப்பதற்கு பதிலாக கோவிலுக்கென்று தேவையான அடிப்படை வசதிகளையும் , மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் செய்துதருமாறு கேட்டுக்கொள்ளலாம். கோவில் அறங்காவலர்கள் தலைமையில் ஒரு குழு ஏற்படுத்தி அவர்களின் மேற்பார்வையில் இந்த வசதிகளை மேற்கொள்ளலாம்.
இது ஏற்கனவே மத்திய அரசு, மோடிஜி அவர்கள் செய்து கொண்டு இருப்பது தான்.
ஆமாம் நம்ம ஆட்சியில் எல்லாம் வெளிப்படையா ஊழல் நடக்கும்
மொட்டை தாதன் குட்டையில் விழுந்தான். அது சரி. மொட்டை தாதன் யாரு?மேலும்
-
லிப்ட் பழுதாகி ஏற்படும் விபத்துக்கு யார் பொறுப்பு? உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
-
திரிணமுல் காங்கிரஸ் ஆதரவாளர் வீட்டில் அள்ள அள்ள பணம்: ரூ.29 கோடி பறிமுதல்
-
வாலிபர் மாயம்
-
ரகளை செய்த வாலிபர் கைது
-
கல்வராயன்மலையில் கோடை விழா துவக்கம் : 6 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மகிழ்ச்சி
-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சி துவக்கம்