பாண்டி முனியய்யா கோயிலில் ஆடி பால்குட விழா
திருப்புத்துார்:திருப்புத்துார் ஒன்றியம் காட்டாம்பூர் சௌமிய நாராயணபுரத்தில் பாண்டி முனியய்யா கோயில் ஆடி பால்குட விழா நடந்தது.
இக்கோயிலில் கடந்த 22 ஆண்டுகளாக ஆடியில் பால்குட அபிஷேக விழா பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. திருவிழா ஆடி ஒன்றாம் தேதி காப்புக் கட்டி துவங்கியது. நேற்று காலையில் பால்குடத்துடன் கல்வெட்டு மேடு செல்வவிநாயகர் கோயிலில் கூடினர். தொடர்ந்து சௌமிய நாராயணபுரம் வழியாக ஊர்வலமாக முனியய்யா கோயிலுக்கு பகதர்கள் வந்தனர்.
சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து பாண்டி சுவாமிக்கு பூச்சொரிந்து வழிபட்டனர்.
மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு அதிகாலை கிடாவெட்டி பொங்கல் வைத்து பூஜை நடைபெறும். மதியம் அன்னதான பூஜை நடைபெறும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement