தடையை மீறி கேரளாவிற்கு கனிமம் கொண்டு சென்ற வாகனங்கள் நிறுத்தம்

போடி:தடையை மீறி கேரளாவிற்கு முந்தல் சோதனை சாவடி வழியாக கனிமம் ஏற்றி சென்ற கனரக வாகனங்களை போலீசாரால் தடுத்து நிறுத்தினர்.

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஜல்லி கற்கள், பாறைகள், எம்.சாண்ட், பி.சாண்ட் கொண்டு செல்ல தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு தடை விதித்து உள்ளது. நேற்று முன்தினம் போடி அருகே உள்ள கல்குவாரியில் அனுமதி சீட்டு பெற்று கற்கள் ஏற்றிய வாகனங்கள் போடி முந்தல் சோதனை சாவடி வழியாக கேரளா கொண்டு செல்ல முயன்றனர். தமிழக சோதனை சாவடியில் போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர். வாகனத்தில் தடை விதிக்கப்பட்ட பாறை கற்கள் இருந்தது தெரிந்தது. தடுத்து நிறுத்திய போலீசார் வாகனத்தை கேராளாவிற்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பினார். இதனால் வாகனத்தில் இருந்த கற்களை மீண்டும் குவாரியில் கொட்டி விட்டு வாகனத்தை மட்டும் கேரளா செல்ல அனுமதித்தனர்.

இதனை ஒட்டி போடியில் இருந்து முந்தல், போடிமெட்டு சோதனை சாவடி வழியாக பாறைகள், ஜல்லி கற்களை கேரளாவிற்கு கொண்டு செல்லாத வகையில் போலீசார் தீவிர சோதனைகள் ஈடுபட்டு உள்ளனர்.

Advertisement