ஆடி உற்சவ விழா

திருப்புவனம், ஜூலை 31-

திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் ஊர்க்காவலன் சுவாமி கோயிலில் ஆடி உற்சவ பெரு விழா நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஊர்க்காவலன் சுவாமி கோயிலில் 14 நாட்கள் ஆடி உற்சவ பெருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா 16 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நிறைவு நாளான நேற்று மதுரை அழகர்கோயிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வந்து ஊர்க்காவலன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Advertisement