கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
புதுச்சேரி: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
டி.நகர் உதவி சப்இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் தட்டாஞ்சாவடி பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கம்பளிசாமி மடம் பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி பொது மக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, போலீசார் அங்கு சென்ற போது, அந்த வாலிபர் தப்பியோட முயன்றார். அவரை விரட்டிப் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர், தட்டாஞ்சாவடி சந்தோஷ்குமார்,28; என தெரிய வந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement