காப்பு காட்டில் தீ விபத்து

தேனி:அல்லிநகரத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் பைபாஸ் ரோட்டில் மேற்கு பகுதியில் உள்ள போடி வடக்குமலை காப்பு காடு பகுதியில் ஜூலை 29 இரவு தீப்பற்றியது. ஜூலை 30 மாலை வரை தீ பற்றி எரிந்தது. தேனி வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். தீ பற்றிய இடம் சாய்வான மலைப்பகுதி என்பதால் தீயை அணைக்க முடியவில்லை. கடும் வெயிலால் காய்ந்த செடிகளில் தீ பற்றியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மலைப்பகுதிகளில் தீ விபத்து தொடராமல் இருக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement