உத்தரவையில் சிசிடிவி., கேமராக்கள் திறப்பு
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் புதிய நுழைவு வாயில் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருப்புல்லாணி எஸ்.ஐ., அயன் ராஜ் தலைமை வகித்தார். உத்தரவை கிராமத் தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் ராணுவ நலச் சங்க செயலாளர் முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் கணேஷ் உட்பட கிராம முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிராமத்தின் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியில் குற்றச் செயல்கள் நடப்பதை தடுப்பதற்கும் பயனுள்ளதாக அமையும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement