வில்வித்தை போட்டி: சாதித்தமாணவர்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம்: சென்னையில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (C.I.S.C.E) சார்பில், மண்டல அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது. இதில், ராமநாதபுரம் தயான் சந்த் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் 17 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ஸ்ரீசரண் தங்கப்பதக்கமும், பெண்கள் பிரிவில் வன்ஷிகா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

மேலும் 14 வயது பெண்கள் பிரிவில் மாணவி யான்ஷிகா நான்காம் பரிசு வென்று ஆந்திரா மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். சாதித்த மாணவர்களை தலைமை பயிற்சியாளர் சாமுவேல் லவ்லி சுந்தர்,  பயிற்சியாளர் மங்களநாததுரை  பாராட்டினர்.––––

Advertisement