10 ஆண்டு பகையில் லோடுமேன் கொலை

சோழவந்தான்: -முள்ளிப்பள்ளத்தில் 2017ல் செல்லத்துரை என்பவர் சிலருடன் ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்டார். பழிக்குப்பழியாக 2022-ல் சிட்டு என்பவரை செல்லத்துரை தரப்பினர் கொலை செய்தனர். பதிலுக்கு சிட்டு தரப்பினர் செல்லத்துரையின் சகோதரர் பாண்டித்துரையை வெட்டிக் கொலை செய்தனர்.

இந்நிலையில் செல்லத்துரை தரப்பைச் சேர்ந்த முள்ளிப்பள்ளம் லோடுமேன் சஞ்சய்குமாரை 25, தேங்காய் கோடவுனில் சிட்டு தரப்பினர் நேற்று மாலை வெட்டிக் கொலை செய்தனர். காடுபட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரவணபெருமாள் 25, முத்தீஸ்வரன் 25, விக்னேஷ் 25, சரணடைந்தனர். டி.எஸ்.பி., ஆனந்தராஜ் தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

இறந்த சஞ்சய்குமாருக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

Advertisement