வனப்பகுதியில் யானை உடல் மீட்பு

கொடைக்கானல்:கொடைக்கானல் வனச்சரகத்திற்குட்பட்ட அஞ்சுவீடு அருவி அருகே வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. ரோந்து சென்ற வனத்துறையினர் இதனை கண்டறிந்தனர். தொடர்ந்து கால்நடை டாக்டர் மூலம் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யானைகளுக்குள் சண்டையிட்டதில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலியானது தெரியவந்தது.

கொடைக்கானல் டி.எப்.ஓ.,அரவிந்த், உதவி வனபாதுகாவலர் கருப்பையா, ரேஞ்சர் கோகுல் உள்ளிட்ட வனத்துறையினர் உடனிருந்தனர்.

Advertisement