உலக புலிகள் தின விழிப்புணர்வு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக புலிகள் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். புலிகள் பற்றிய விழிப்புணர்வு, புலிகளை காக்க மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்தனர். வீட்டில் மரம் வளர்ப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

புலிகள் பற்றிய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசகி செய்தார். மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement