வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி; கரூர் மாவட்டம் முதலிடம்

கரூர்: தமிழகத்தில், வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியில் தொடர்ந்து கரூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், கரூர் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்டவை உள்ளன. இங்கு, பருத்தியில் உற்பத்தி செய்யப்படும் ஸ்கிரீன், தலையணை உறைகள், மேஜை விரிப்பு, கைக்குட்டை, சோபா விரிப்பு, துண்டு ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த, 1970ல் தொடங்கிய கரூரின் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி, தமிழகத்தில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியில், கரூரின் பங்கு, 28.10 சதவீதம். 2025-26ல், 2ம் இடத்தில் கோவை, 2,611.41 கோடி ரூபாய், 3ம் இடத்தில் திருப்பூர், 2,162.4 கோடி ரூபாய், 4ம் இடத்தில் ஈரோடு, 1,558.12 கோடி ரூபாய், 5ம் இடத்தில் விருதுநகர், 1,314.58 கோடி ரூபாயாக உள்ளது.

ஏற்றுமதி (ரூ/கோடியில்) 2021-22 5,065.86 2022-23 5,099.58 2023-24 4,431.79 2024-25 4,665.86 2025-26 5,086.83 தகவல்: மத்திய வர்த்தக அமைச்சகம்

Advertisement