மாணவர்களுக்கு பாராட்டு விழா

ரெகுநாதபுரம்: கீழக்கரை குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அதில் 44 பள்ளிகள் கலந்து கொண்டன.

ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தடகளம் ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும், பெண்கள் பிரிவில் மூன்றாமிடம் பிடித்தனர். இதில் தனிநபர் பிரிவில் ஸ்ரீஹரி, பெண்கள் பிரிவில் சந்தோஷிகா ஸ்ரீ சாம்பியன் பட்டம் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் கோகிலா, முதல்வர் ஸ்ரீ காருண்யா தேவி, துணை முதல்வர் முத்துக்கண்ணு, உடற்கல்வி ஆசிரியர் அருள் மாரி ஆகியோர் பாராட்டினர்.

Advertisement