மரக்கன்று நடும் விழா

சிவகாசி, ஆக. 2 -

தேசிய காகித தினத்தை முன்னிட்டு, சிவகாசி பசுமை மன்றம், சிவகாசி காகித வியாபாரிகள் சங்கம் சார்பில், தீயணைப்பு நிலைய பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் 200 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மாநகராட்சி கமிஷனர் கண்ணன், தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப்பணி நிலைய அலுவலர் சீனிவாசன் துவக்கி வைத்தனர். சிவகாசி காகித வியாபாரிகள் சங்க தலைவர் ராதாசேகரன் ,

தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஜெய்சங்கர் ,மாநகர் நல அலுவலர் ஸ்ரீதேவி, சுகாதார அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், துாய்மை பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள்பசுமை மன்ற நிர்வாகிகள், காகித வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Advertisement