செந்தில் பாலாஜி முன்ஜாமின் வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா விலகல்
புதுடில்லி: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மேல்முறையீட்டு வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா விலகுவதாக அறிவித்துள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியில், டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் முறைகேடு, சட்ட விரோதமாக பார் நடத்தியது, அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பல கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டு உள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாந்திரம் உள்ளதாகவும், எனவே, காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதால், முன்ஜாமின் வழங்க முடியாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் மேல்முறையீட்டு மனுவை செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மனுதாரரின் கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கை அவசர வழக்காக பட்டியலிட்டு, விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்வதாக உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதியான மோகனா வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஏற்கனவே செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணைகளில் அவர் வழக்கறிஞராக ஆஜராகி இருந்ததால், தற்பொழுது நீதிபதியாக தொடர்ந்தால் சரியாக இருக்காது எனக் கூறி, அவர் விலகினார். இதையடுத்து, புதிய அமர்வை இன்றைய தினமே அமைத்து மதியம் 1 மணிக்கு விசாரிப்பதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞராக இருந்த மோகனா, கடந்த ஜூன் மாதம் தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
@block_Y@
எம்எல்ஏக்கள் குதிரை பேர வழக்கில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு அளிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதால், ஆக., 5ம் தேதி கண்டிப்பாக போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி விடுவேன் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.block_Y
எது எப்படியோ, சீக்கிரமே சுப்ரீம் கோர்ட்டு உயர் நீதிமன்ற முடிவை உறுதி செய்து உத்தரவிட்டு அந்த ஆளை உடனே கைது செய்து விசாரணைகளை ஆரம்பிக்க ஆவண செய்யவேண்டும். நேரம் கொடுக்ககொடுக்க அந்த ஆளு நிறையவே யோசிப்பார். நெஞ்சு வலி, கிட்னி வலி, மூளை பாதிப்புனு விதவிதமா காரணங்களை சொல்லலாம், வெளிநாட்டுக்கு ஓடிப்போகலாம், தம்பி காணாமல் போயி மறைவாக இரண்டு மூன்று வருஷங்கள் அலையமுடியும் என்கிறபோது, அண்ணன் பதினாறடி பாயமாட்டாரா? ஆகவே, அரசும் போலீசும் முழு அலெர்ட்டுடன் இருந்து உள்ளே வைத்து விசாரிக்கவேண்டிய வழியில் விசாரித்து டாஸ்மாக் ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் வளைவுக்குள் கொண்டுவரவேண்டும். மொத்த திருட்டு குடும்பமும் உள்ளே செல்லும் நாள் கண்கொள்ளா காட்சியாக இருக்கப்போவுது. அதைக்காண மொத்த தமிழகமும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.
கேவலமான இந்திய நீதித்துறை
வழக்கறிஞர்கள் வேலை செய்த பின் நீதிபதி பணி கொடுப்பது நீதித்துறையை பாழ் படுத்தி விடும். பொது பணி கான்ட்ராக்டர் அரசு பொறியாளர்கள் நட்பில் இருந்தால், அங்கு ஊழல், முறைகேடு தான் உருவாகும். நீதி மன்றத்தில் வழக்கறிஞர் வேலை செய்யாத பட்டதாரிகளை நீதிபதிகள் போட்டி தேர்வு வைத்து அரசு தேர்வு செய்ய வேண்டும். நீதிபதி பயிற்சி கொடுத்து நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அதிகாரிகள் ஒன்றும் அந்நிய நாட்டவர் கிடையாது. சட்டம் விதிகள் பார்த்து நீதி வழங்கும் முறை வெகுவாக குறைந்து விடும். பிஜேபி ஒன்றும் செய்ய தெரியாமல் முழிகிறது. ?
Difficult to understand SC’s priorities in deciding the urgency of a case. Why should this case be heard urgently. What catastrophe will happen if Senthil Balaji is arrested pending SC hearing. Silly.
இன்னுமா இவருக்கு நெஞ்சு வலி வரலை . நேத்திக்கே வந்திருக்கணுமே
"""நீதிபதி மோகனா வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஏற்கனவே செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணைகளில் அவர் வழக்கறிஞராக ஆஜராகி இருந்ததால், தற்பொழுது நீதிபதியாக தொடர்ந்தால் சரியாக இருக்காது எனக் கூறி, அவர் விலகினார்."""
அவர் யாருக்காக வாதாடினார் ? செந்தில் பாலாஜி பக்கம் வாதாடினால், கண்டிப்பாக விலக வேண்டும்
அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு பயந்து நீதிபதிகள் விலகுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. விரைவில் A I தொழில் நுட்ப உதவியுடன் விசாரணை நடத்தி தண்டனை விதிக்க வேண்டும்
ஏற்கனவே ஆஜராகி இருந்தால் என்ன? மீண்டும் ஆஜராக கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? அப்படி இருந்திருந்தால் அவரை முன்னமேயே தலைமை நீதிபதி நீக்கி இருக்கவேண்டுமே ஏன் அப்படி செய்யவில்லை. எனக்கென்னமோ, மோகனாவை செந்தில் பாலாஜி மிரட்டியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
அரசியல்வாதிகளுக்கும் வசதி உள்ளவர்களுக்கும் சட்டம் நன்றாகவே வேலை செய்யும்
சட்டம் கை கட்டி வாய் பொத்தி எல் எண்ராள் எந்நெய் போள வேளை செய்யும்