இதே நாளில் அன்று

ஆகஸ்ட் 2:


கடலுார் மாவட்டம், காராமணிக்குப்பத்தில், விஞ்ஞானி வாலறிவன் - பேராசிரியை சரோஜா தம்பதியின் மகளாக, 1999ல் இதே நாளில் பிறந்தவர், இளவேனில் வாலறிவன்.

இவரது 3வது வயதில், தந்தையின் பணி நிமித்தமாக, குஜராத் மாநிலம், ஆமதாபாதில் குடியேறினர். அங்குள்ள குளோபல் மிஷன், சன்ஸ்கார்தாம் பள்ளிகள் மற்றும் குஜராத் பல்கலையில் படித்தார். ராணுவ வீரரான இவரது அண்ணன் இறைவன் வாலறிவனின் துப்பாக்கி சுடும் பயிற்சியை பார்த்து, தன் 13வது வயதில் இவரும் பயிற்சியில் சேர்ந்தார்.

ஒலிம்பிக் வீரர் ககன் நரங்கின், 'கன் பார் குளோரி அகாடமி'யில் தன்னை மெருகேற்றிக் கொண்டார். 2018 சிட்னி ஜூனியர் உலகக் கோப்பை; 2019 ரியோ டி ஜெனீரோ உலகக் கோப்பை; சீனா ஐ.எஸ்.எஸ்.எப்., உலகக் கோப்பை போட்டிகளில், '10 மீட்டர் ஏர் ரைபிள்' பிரிவில் தங்கப் பதக்கங்களை அள்ளி குவித்தார்.

'அர்ஜுனா' விருது பெற்ற இவருக்கு இன்று, 27வது பிறந்த தினம்!

Advertisement