நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்

குளித்தலை:குளித்தலை நகராட்சி, கரூர் நெடுஞ்சாலை, மணத்தட்டை, சுங்ககேட், கடம்பர் கோவில், ஒருங்கிணைந்த நீதிமன்றம், தாலுகா அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், பெரியபாலம், பெரியார் நகர் வரை உள்ள நெடுஞ்சாலை இரு புறங்களிலும் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், நகராட்சி எல்லைக்குட்பட்ட முக்கிய சாலைகளான உழவர் சந்தை புறவழிச்சாலை, அண்ணா நகர், காவிரி நகர், பஜனைமடம், ரயில்வே ஸ்டேஷன் சாலை, புதிய கோர்ட் சாலை, மாரியம்மன் கோவில் சாலை, தெப்பக்குளம் செல்லும் சாலை, மலையப்பன் நகர், பாரதி நகர், விநாயகர் கோவில் சாலை, வைகைநல்லுார் அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இரு பகுதிகளில் இயங்கும் வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனை, உணவகங்கள், மொத்தம் மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் முன் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தம் செய்யப்படுவதால், இச்சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பலமுறை கோரிக்கை விடுத்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

Advertisement