ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிட பள்ளியில் அறிவியல், சுடுமண் கைவினை கண்காட்சி
புதுச்சேரி: ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியில் அறிவியல் மற்றும் சுடுமண் கலை கைவினை கண்காட்சி, திருக்குறள் விளையாட்டு என, முப்பெரும் விழா நடந்தது.
பள்ளி நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், வித்யநாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு, மாணவர்களின் ஆராய்ச்சி படைப்புகளை பாராட்டினர்.
சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற சுடு களிமண் கைவினை கலைஞர் முனுசாமி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சுடுமண் கலை எவ்வாறு தொழில்நுட்ப கருவிகள் வடிவமைப்பில் ஈடுபடுத்தப்படுகிறது என, செயல்முறை பயிற்சி அளித்தார்.
திருக்குறளின் சொற்கள் பொறிக்கப்பட்ட பிரிட்டானியா பிஸ்கட்டுகளை சேகரித்து முழுக் குறளை வடிவமைக்கும் சவாலில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதித்யா கல்வி குழுமத்தினரால் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
கண்காட்சியில் குவாண்டம் எதிர்ப்புத்திறன், டி.என்.ஏ., மின்னியல் தரவு அறிவியல், ஏ.ஐ., மூலம் மரபணு தரவின் பகுப்பாய்வு, உயிரித் தொழில்நுட்பம், அல்காரிதம் முதல் நுண்ணறிவு வரை, மரபணுத் திருத்தம், விண்வெளித் தொழில்நுட்ப ஆய்வு போன்ற தலைப்புகளில் 1,500க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன.
கண்காட்சியில் மழலையர் பிரிவு முதல் உயர்கல்வி வரை பயிலும் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். சிறந்த படைப்புகள் கொடுத்த மாணவர்களுக்கு பரிசுகள், கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.