பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா இருநாள் பயிற்சி முகாம் அய்யங்குட்டிப்பாளையம், விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.

பயிற்சி முகாமினை, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., முன்னாள் சபாநாயகர் செல்வம், முன்னாள் மாநிலத் தலைவர் தாமோதரன், தசரத், மாவட்டத் தலைவர்கள் உலகநாதன், கிருஷ்ணராஜ், மாநில பொது செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement