விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் சொற்பொழிவு
புதுச்சேரி: புதுச்சேரி விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில், இந்திய தத்துவ ஆராய்ச்சி மன்றம் சார்பில், (ஐ.சி.பி.ஆர்) ஒருநாள் தொடர் சொற்பொழிவு நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தக் ஷசிலா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் செந்தில்குமார் கலந்து கொண்டு, உலகளாவிய சவால்களுக்கான தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் அறநெறி சார்ந்த அணுகுமுறைகள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் அறநெறியும் பொறுப்புணர்வும் என்ற தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்.
அவர், கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தத்துவம் ஒருங்கிணைப்பை விளக்கி, மனிதநேயம், சமூகப் பொறுப்பு மற்றும் அறநெறி அடிப்படையில் தொழில்நுட்ப வளர்ச்சி அமைய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் பி.எட்., மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.