பேனர் வைத்தவர் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை சிகனல் பகுதியில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். முத்தியால்பேட்டை முதல் அஜந்தா சிக்னல் வரை சாலையின் இருபுறமும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், அரசியல் கட்சி பேனர்கள், திருமண பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இது குறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement