பர்னிச்சர் கடையில் 'தீ'

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியில் குடியிருப்பு பகுதி அருகில், மர பர்னிச்சர் கடை உள்ளது.

நேற்று முன் தினம் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மரச்சாமான்கள் எரிந்தன. அருகே இருந்த 5 வீடுகள் சேத மடைந்தன.

அருகில், காஸ் ஏ ஜன்சி அலுவலகத்தில் சிலிண்டர்களுடன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை, மக்கள் வெளியேற்றினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement